24/06/2025
அறம் சார்ந்த அருட்பணிகளுக்குக் கரம் கோர்க்கும் உணர்வாளர்களில் ஒருவர் தான் கடிநெல்வயல் ஆசிரியர் திரு.M.அண்ணாத்துரை அவர்கள். தான் சார்ந்த கடிநெல்வயல் கிராம சமூகத்தில் பெரும் நிதியினைப்
பெற்றுத் தருவதாக சொல்லி சென்றார்.
நேற்று (23.06.2025) திங்கட்கிழமை மாலை நமது கைத்தடி முதியோர் இல்ல அலுவலகம் வந்து வறியவர்கள் வாழ்வு உயிர்க்க, தான் கரம் தாழ்த்தி பெற்ற ஐம்பதாயிரம் (ரூ50000.00) நிதியினை கருணையோடு வழங்கினார்.
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
சீர்மிகு சிந்தையில் அறத்தினை ஆழப் பொதிந்து நிதி வழங்கியவர்கள் வாழ்வில் மகிழ்வே குடியிருக்க படைத்தவனை பல்லாயிரம் முறை தொழுகின்றோம்.
*தேவையறிந்து சேவை செய்வோம்!
உணர்வறிந்து உதவி செய்வோம்!!
பரிதாபம் பவர்க்கு அரிது கெடும் வருகை
திருக்குறள் 601
துறங்கல் மறவா புகழ்.
ஈகா அறக்கட்டளை ®
ஒருங்கிணைந்த காப்பக வளாக கட்டட வளர்ச்சி குழுமம்.
வேதாரண்யம்.
+9 9443553364

